ஐதராபாத் நிறுவனங்களில் ரூ.149 கோடி நகை பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: ஐதராபாத்தில் எம்எம்டிசி லிமிடெட் நிறுவனத்தில் அந்நிய செலாவணி மற்றும் போதுமான டெபாசிட் தொகை இல்லாமல் தங்க கட்டிகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2 நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசாதிலால் ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இதன் இயக்குனர்கள் சுகேஷ் குப்தா, அனுராக் குப்தா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் உட்பட 5 இடங்களில் கடந்த 17ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஐதராபாத், ஆந்திராவின் விஜயவாடாவில் சோதனை நடத்தப்பட்டது. 18ம் தேதி சுகேஷ் குப்தா கைது செயய்ப்பட்டார். 19ம் தேதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 நிறுவனங்களிடம் இருந்து ரூ.149 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: