திருமலையில் பக்தர்கள் தெரிந்து கொள்ள சப்த கோ மந்திரத்தின் முக்கியத்துவம் அடங்கிய பேனர்கள் வைக்க வேண்டும்-தலைமை செயல் அதிகாரி தகவல்

திருமலை : சப்த கோ மந்திரத்தின் முக்கியத்துவம், பக்தர்களுக்கு தெரியும் விதமாக பேனர்கள் வைக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று, அலிபிரி அருகே உள்ள சப்த கோ பிரசட்தன மந்திரம், வேணுகோபால சுவாமி கோயில் மற்றும் பாத மண்டபம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரியில் அமைக்கப்பட்டுள்ள சப்த கோ மந்திரம், வேணு கோபால சன்னதி, பாத மண்டபத்தில் வழிபடுகின்றனர். அதன் முக்கியத்துவம் குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்த நடைபாதைகள் மற்றும் மலைப்பாதை  சாலைகளில் அனைத்து மொழிகளிலும்  பேனர்கள் வைக்க வேண்டும். கோ  மந்திரத்தை சுற்றி பசுமை மற்றும் இயற்கையை ரசித்தல் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும்.

திருப்பதி  கோசாலையில் தீவன கலவை ஆலை, நெய் உற்பத்தி மையத்தின் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். அகர்பத்தி உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் உள்கட்டமைப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், கோசாலை இயக்குநர் ஹரிந்திரநாத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: