7,887 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குவதாக அறிவித்த முதல்வர் ஜெகன்மோகன் படத்திற்கு பாலாபிஷேகம்-ஆசிரியர் சங்கத்தினர் ஏற்பாடு

சித்தூர் : ஆந்திரா முழுவதும் 7,887 பேருக்கு அரசு ஆசிரியர் பணி வழங்குவதாக தெரிவித்த முதல்வர் ஜெகன்மோகனின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.  

கடந்த 1998ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ஆசிரியர் பணி வழங்குவதாக அரசாணை பிறப்பித்தார். இதனை வரவேற்கும் விதமாக சித்தூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் முதல்வர் ெஜகன்மோகனின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து இனிப்புகள் வழங்கினர்.

 அப்போது, சங்க நிர்வாகிகள் பேசுகையில், ‘மாநிலம் முழுவதும் டிஎஸ்சி பிரிவில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம்.கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு பணி வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் எங்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை.

முதல்வர் ெஜகன்மோகன் டிஎஸ்சி ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கதாக நேற்று அரசாணை வெளியிட்டார்.

அதில், 1998ம் ஆண்டு டிஎஸ்சி பிரிவில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வயது வரம்பு இன்றி ஆசிரியர் பணி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 7,887 பேருக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. ஓரிரு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அரசு ஆசிரியர்கள் பணி வழங்கப்பட உள்ளது’ என்றனர்.

Related Stories: