Ola, Uber செய்த காரியத்தால் வாழ்வாதாரம் இழக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள்: ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்

கர்நாடக: கர்நாடகவில் ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் அரசு நடவடிக்கையை கண்டித்தும் தங்களுடன் பணி ஒப்பந்தம் செய்துள்ள Ola, Uber  நிறுவனங்களுக்கு எதிராகவும், ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சட்டி  Ola, Uber  ரபீட்டோ ஆட்டோக்களை கர்நாடக அரசு பறிமுதல் செய்து வருகின்றது.

இதற்க்கு அவற்றின் ஓட்டுனர்கள் கடும் ஆட்சியபம் தெரிவித்து வருகின்றனர். கட்டணத்தை வரன்முறை செய்து அரசு நிரனியம் செய்தபோது அதையும் மீறி Ola, Uber நிறுவனங்களில் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்துதுறை 3 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

ஆனால் பதில் அளிக்காததால் ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூருவில் உள்ள RTO அலுவலக முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

Ola, Uber உள்ளிட்ட செய்யலிகளில் முறைகேடு நடுப்பதாகவும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கூறினார். விதிகளை மீறி அதிக பணம் வசூலிக்கும் Ola, Uber போன்ற நிறுவனங்களை விட்டுவிட்டு வாழ்வாதாரத்துக்காக போராடும் தங்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்வது நயமா என்று ஓட்டுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: