பத்ராசால் மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு அக்-17 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மும்பை: மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை, மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பத்ராசால் மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. அதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து, சஞ்சய் ராவத்துக்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: