பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலை; பக்கத்து வீட்டு தந்தை, மகன் கைது

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திவீரம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (47), கூலி தொழிலாளி. இவரது 18 வயது மகள், ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த மாணவி, திடீரென எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது, அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. , நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, மாணவியின் தந்தை சின்னதம்பி, சாமல்பட்டி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், அத்திவீரம்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ் (58), அவரது மகன் வேலு (36) ஆகியோர், எனது மகளை பலாத்காரம் செய்துள்ளனர். அதனால் மகள் கர்ப்பமானார்.இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

 

இதில், மாணவியின் உறவினர்களான தந்தை புஷ்பராஜூம், மகன் வேலுவும் அவர்கள் வீட்டருகே வசித்துள்ளனர். வேலுவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். உறவினர் என்பதால் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி வந்த வேலு, ஆசை வார்த்தைகள் கூறி தனது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார். இதை அறிந்த அவரது தந்தை புஷ்பராஜ், திருமணமாகி குழந்தைகள் உள்ள மகனுடன் தொடர்பில் இருப்பதை அம்பலப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இப்படி தந்தை, மகன் பாலியல் தொல்லையால் கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த மாணவி, மனஉளைச்சலால் தற்கொலை முடிவெடுத்து எலி ேபஸ்டை தின்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.  இதையடுத்து தந்தை, மகன் இருவரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: