ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு: தண்டவாளத்தில் படுத்து இன்ஜி. மாணவர் தற்கொலை

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவி. இவர் மணப்பாறை பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ்(22). இவர் மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் உண்டு. இதில் சந்தோஷ் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து ஏராளமான நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சந்தோஷ் இன்று காலை அமையபுரம் என்ற இடத்தில் ரயில் முன் தண்டவாளத்தில் படுத்தார். இதில் அவர் தலை துண்டித்து அதே இடத்திலேயே  பிணமானார். தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: