வெள்ள தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

தாம்பரம்: பல்லாவரம் தொகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று காலை மண்டல அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், இ.கருணாநிதி ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் தொகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று காலை 2வது மண்டல அலுவலகத்தில் இ.கருணாநிதி எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சென்னை வருவாய் நிர்வாக இணை ஆணையர் ஜான் லூயிஸ் பங்கேற்று, பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட 35 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் உள்பட காவல், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: