தக்கலை அருகே நிறுத்தி வைத்திருந்த வைக்கோல் லோடு தீப்பற்றி எரிந்து நாசம்

குமாரபுரம்: தக்கலை அருகே வில்லுகுறி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ராஜ் (வயது 42). டிரைவர். வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். ஜெகன் ராஜ் நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான டெம்போ  எடுத்து சென்று  திருநெல்வேலி பகுதியில் இருந்து வைக்கோல் லோடு ஏத்தி களியக்காவிளைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேரமானதால் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் புலியூர்குறிச்சி அழகர் அம்மன் கோயில் பகுதியில் ரோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் அவரது உறவினரிடம் இருந்து செல்போன் மணி அழைத்தது.

செல்போனை எடுத்து  பேசும் போது உங்களது  வைக்கோல் லோடு எரிந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார். உடனே அவசர அவசரமாக கிளம்பி வந்து பார்க்கும்போது அங்கு தீயணைப்பு படையினர் நின்று தீயை அனைத்து கொண்டிருந்தனர். வண்டி முழுவதுமாக எரிந்து  நாசமானது. அதன் மதிப்பு இரண்டரை லட்சம் என்று கூறினார். மேலும் குறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்க  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: