3டியில் சமந்தா படம்

மகாகவி காளிதாஸ் எழுதி உலகப்புகழ் பெற்ற ‘அபிஞான சாகுந்தலம்’ என்ற சமஸ்கிருத நாடகத்தை தழுவி உருவாக்கப்படும் படம், ‘சாகுந்தலம்’. இது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில், வரும் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. காரணம், இப்படத்தை முழுமையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி முடித்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சகுந்தலை, ராஜா துஷ்யந்தன் காதலை மையப்படுத்திய இப்படத்தில் சகுந்தலையாக சமந்தா, ராஜா துஷ்யந்தனாக தேவ் மோகன் நடிக்கின்றனர். மற்றும் சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கவுதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, ஜிஷு சென்குப்தா ஆகியோருடன் நடிகர் அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா நடிக்கிறார். நீலிமா குணா தயாரிக்கிறார். சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசை அமைக்கிறார். குணசேகர் எழுதி இயக்குகிறார்.

Related Stories: