காரில் கடத்திய 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வல்லம்: தஞ்சை அருகே காரில் கடத்தி வந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோவை போலீசார் பறிமுதல் செய்து கார் டிரைவரை கைது செய்தனர். தஞ்சை அருகே வல்லம் மின் நகர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து விசாரித்தனர்.

இதில் காரை ஓட்டி வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் புகையிலை பொருட்களை கடத்திய தஞ்சை வெட்டுக்காரத் தெருவை சேர்ந்த கிரிதரன் (27) மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: