ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 லட்சம் பனை விதைகள் 5 மணி நேரத்தில் நட்டு உலக சாதனை: 80 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

வாலாஜா: தமிழக முதல்வரின்  காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடுவதற்காக, விதைகளை சேகரிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. தொடர்ந்து, நேற்று மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடும் உலக சாதனை நிகழ்வு நடந்தது.அதன்படி, வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் நடந்த பனை விதை நடும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர், கலெக்டர் ஆகியோர் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், கடந்த 3 மாதங்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் தீவிர முயற்சியினால் 52 லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் மரம் நடும் பணி காலையில் தொடங்கி மாலை வரை 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடப்படுகிறது. இது உலக சாதனையாகும். இந்த பணியில் 80 ஆயிரம் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பனை மரங்களை தொடர்ந்து பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: