காசோலை மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காசோலை மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு 6 மாதம்  சிறை தண்டனை அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.எல். லட்சுமணனின் மருமகன் ஏ.எஸ்.குமார் ரூ.1.20 கோடி பெற்றுள்ளார். கடன் தொகை ஒரு கோடி 20 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏ.எல்.குமாருக்கு எதிராக காசோலை மோசடி நிரூபிக்கப்பட்டதை அடுத்து 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.

Related Stories: