சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி வேன் உதவியாளர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியை சேர்ந்த 3.5 வயது சிறுமி, ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறாள். இந்த சிறுமி தினமும் வேன் மூலம் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். கடந்த 20ம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி, தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். உடனே பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த டாக்டர், சிறுமிக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிறுமியை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரது புகைப்படத்தையும் காட்டி விசாரணை நடத்திய போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சிறுமியை அழைத்து செல்லும் வேன் உதவியாளர் சத்யராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பள்ளி வேன் உதவியாளர் சத்யராஜை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: