வித்தை காட்டியவருக்கு நாக பாம்பு ‘மவுத் கிஸ்’: வைரலாகும் வீடியோ

ஷிவமொக்கா: திருமண வீட்டில் இருந்த நாகபாம்பை  பிடித்து முத்தமிட முயன்றவருக்கு, பாம்பு ‘மவுத் கிஸ்’ கொடுத்தது. கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா  மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், பொதுமக்களை  அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண  வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல்  கொடுத்தனர். 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அதை மீட்ட அலெக்ஸ், அதை வைத்து மக்களுக்கு வித்தை காட்டினார்.

அப்போது, பாம்பின் தலை பகுதியில் முத்தம் கொடுக்க முயன்றார். ஆனால்,  பாம்பு திடீரென திரும்பி அவருடைய வாயை கடித்தது. இதை பார்த்து மக்கள் அலறினர். பத்ராவதி  அரசு மருத்துவமனையில் அலெக்ஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து ஷிவமொக்காவில் உள்ள  மெக்கான் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற அவர், வீடு திரும்பினார்.  நாகப்பாம்பை பிடித்து முத்தமிடும்போது, அதே பாம்பு அவருக்கு மவுத் கிஸ்  கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: