பொற்கோயிலில் அல்லு அர்ஜுன்

சண்டிகர்: பஞ்சாபிலுள்ள பொற்கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு புஷ்பா 2வில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதன் படப்பிடிப்பை அவர் தொடங்கிவிட்டார். தற்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதையடுத்து பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு செல்ல அல்லு அர்ஜுன் திட்டமிட்டார். அதன்படி குடும்பத்தினருடன் அவர் இந்த கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். மனைவி சினேகா ரெட்டி, மகன் அயான், மகள் அர்ஹா ஆகியோருடன் அல்லு அர்ஜுன் கோயிலுக்கு வந்திருந்தார்.

அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பிறகு அன்னதானம் வழங்குமிடத்துக்கு சென்று குடும்பத்தாருடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். இது பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, ‘பொற்கோயிலுக்கு பல வருடங்களுக்கு முன் வந்திருக்கிறேன். எப்போதெல்லாம் மனதுக்கு அமைதி வேண்டும் என விரும்புவேனோ அப்போதெல்லாம் இங்கு வந்துவிடுவேன். இந்த முறை மகன், மகளையும் அழைத்து வந்தேன். அவர்களுக்கும் ஆன்மிகத்தின் பக்கம் ஈர்ப்பு இருக்கிறது’ என்றார்.

Related Stories: