கோயில் ஊழியர்கள் நியமனம் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிப்பது தொடர்பாக 6 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தமிழகத்தில் அரசு ஊழியர்களை கோயில் பணிகளுக்கு தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கோயில் வருமானத்தில் இருந்து வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப்பெற்று, கோயிலுக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்,’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘கோயில்களின் நலன் கருதி, அறநிலையத்துறை ஊழியர்களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை,’ என கூறிய வழக்கை முடித்து வைத்தது. இந்த  உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ்  மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவுக்கு 6 வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

Related Stories: