100வது படம்: நாகார்ஜுனா நெகிழ்ச்சி

ஐதராபாத்: தனது 100வது படம் குறித்து நெகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்தார் நாகார்ஜுனா.தெலுங்கில் பங்கர்ராஜு, அதையடுத்து இந்தியில் பிரம்மாஸ்திரா என இரு படங்களின் வெற்றிக்கு பிறகு நாகார்ஜுனா நடிப்பில் தி கோஸ்ட் தெலுங்கு படம் வெளியாக உள்ளது. இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனல் சவுகான் நடித்துள்ளார். அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கர்னூல், எஸ்டிபிசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாகார்ஜுனாவுடன் அவரது மகன்களும் நடிகர்களுமான நாக சைதன்யா, அகில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நாகார்ஜுனா பேசும்போது, ‘தி கோஸ்ட் முழுநீள ஆக்‌ஷன் படமாகும். இந்த படத்துக்காக நானும் சோனலும் ராணுவ பயிற்சி எடுத்தோம். அது எல்லாமே படத்தில் வரும் துப்பாக்கி சண்டை காட்சிகளுக்காக. படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு இது பிடிக்கும். நான் தெலுங்கில் கடைசியாக பங்கர்ராஜு படத்தில் நாகசைதன்யாவுடன் நடித்தேன். அந்த படம் தியேட்டரிலும் ஓடிடியிலும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அகிலுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அது எனது 100வது படமாகும்’ என்றார்.

Related Stories: