ஆரணி அருகே ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியல்

ஆரணி: ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு 300 மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சிகரெட் பிடித்து மாணவி முகத்தில் புகை விட்டதாக 12ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. மாணவனை கண்டித்து ஆசிரியர் உள்பட 2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். சேவூர் அரசு பள்ளியை சேர்ந்த மேலும் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: