சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிசிடிவி காட்சியில் சிக்கிய 2 பேர் கைது

சேலம்: சேலம் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது ெசய்யப்பட்டனர். சேலம் அம்மாப்பேட்டை பரமக்குடி நல்லுச்சாமி தெருவை சேர்ந்தவர்  ராஜன்(50). ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான இவர் சிற்ப கலைஞராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை 2 மணியளவில் இவரது வீட்டின் கதவில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இந்த சத்ததை கேட்டு வீட்டில் இருந்து ராஜன் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டு வாசலில்  பாட்டில் உடைந்து சிதறிக் கிடந்தது.  பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சையத்அலி(42), 34வது வார்டு கிளை தலைவர் காதர்உசேன்(33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். உடனே அவர்களது உறவினர்கள், சில அமைப்புகள் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டு, மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், கிச்சிப்பாளையம் கரிம் காம்பவுண்ட் பகுதியிலும் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மண்டைக்காடு: குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (55). தொழிலதிபர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது வீட்டின் அருகில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த நபர், பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து வீசி விட்டு தப்பி சென்றார்.இதில் கல்யாணசுந்தரத்தின் வீட்டின் முன் பகுதியில் நின்ற கார் சேதம் அடைந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து முன் பகுதியில் கிடந்த சோபா மற்றும் சைக்கிளும் சேதம் அடைந்தன. புகாரின்படி மண்டைக்காடு போலீசார் வந்து ஆய்வு செய்தனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் மர்ம நபர் வந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு மற்றொருவருடன் பைக்கில் தப்பி செல்லும் காட்சிகள் உள்ளன. இவரது வீட்டில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்கள்  செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள வீடுகளில் உள்ள கேமராக்களும் செயல் இழந்துள்ளன. ஒரே ஒரு கேமரா மட்டும் செயல் இழக்கவில்லை. அதில்தான் பெட்ரோல் குண்டு வீச்சு காட்சிகள் பதிவாகியுள்ளன. நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் கார் ஒன்றில் அவரது வீட்டின் அருகில் நோட்டமிட்டு சென்றுள்ளனர். அப்போது கேமராக்கள் ஜாமர் மூலம் செயல் இழக்க வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. திருப்பூரில்: திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்த ஏவிபி லேஅவுட் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். மில் அதிபர்.

இவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பாஜ பொறுப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாலு குடியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதியில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு பைக்கில் வந்த 2 பேர் லட்சுமணன் வீட்டிற்குள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் குண்டை வீசி சென்றனர். ஆனால் அது வெடிக்கவில்லை. கோவையில் 2 பேர் கைது: கோவை, குனியமுத்தூர் இந்து முன்னணி பொறுப்பாளர் ரகு வீட்டில் பாட்டிலில் எரிபொருள் நிரப்பி வீசப்பட்டது, சுப்புலட்சுமி நகரில் பாஜ பொறுப்பாளர் பரத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குனியமுத்தூர் அறிவொளி நகரை சார்ந்த ஜேசுராஜ் (34), திருவள்ளுவர் நகரை சேர்ந்த இலியாஸ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு அடுத்த மூலப்பாளையத்தில் பாஜ பிரமுகரின் பர்னிச்சர் கடை மீது பாலித்தீன் கவர்களில் டீசல் நிரப்பி வீசியது தொடர்பாக 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

*திண்டுக்கல்லில் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம், குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (43). பாஜ பிரமுகரான இவரது வீட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் குடோனில் நிறுத்தி இருந்த கார் மற்றும் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். புகாரின்படி நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து  விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் (29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: