ஆந்திர முதல்வர் அறிவிப்பு பாலாறு புல்லூர் தடுப்பணை ரூ.120 கோடியில் விரிவாக்கம்: தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதியில் மகளிர் குழுவினருக்கான 3ம் கட்ட நிதியுதவி திட்ட தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: தமிழக-ஆந்திர எல்லையிலான திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புல்லூர் கனகநாச்சியம்மன் கோயில் அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை ரூ.120 கோடியில் விரிவாக்கம் செய்து அதிகளவில் தண்ணீர் சேமிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே, முந்தைய ஆந்திர அரசுகள் புல்லூர் பாலாற்றின் தடுப்பணை உயரத்தை உயர்த்தியதால் தமிழக விவசாயிகள் பாதித்துள்ளனர். தமிழக கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தடுப்பணையின் உயரம் உயர்த்தப்பட்டது. தற்போது, மீண்டும் இது விரிவாக்கம் செய்யப்படுவதாக ஜெகன் மோகன் தெரிவித்து இருப்பதால், தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: