வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது: 10 செல்போன்கள் பறிமுதல்

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட், நெல் அரிசி மண்டி, திருவள்ளூர் கூட்டு சாலை, செங்குன்றம், சோத்துப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் செல்போன் பறிப்பு  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்வேறு புகார்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்குன்றம்  போலீசார் நேற்றுமுன்தினம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பயணியிடம் செல்போன் பறித்துக் கொண்டிருந்த இரண்டு பேரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு விசாரணை செய்தனர். அதில், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட் சாய் (19), ஆனந்த் (19) என தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து 10 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: