நில அபகரிப்பு செய்ததாக புகார் ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து

சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீது தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குவிட்டன்தாசன் என்பவரின் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் நில அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரித்தது என 2 வழக்குகளை திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீது பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது. இரு தரப்பிலும் வக்கீல்களின் வாதங்களை வைத்தனர். குறிப்பாக இது தொடர்பான சிவில் வழக்குகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி, மனுதாரர் ஜெகத்ரட்சகன் மீது தொடரப்பட்ட 2 வழக்குகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

Related Stories: