டபிள் யு.பிஏ. சௌந்தரபாண்டியனார் 130வது பிறந்தநாள் கொண்டாட்டம்: வரலாற்று புத்தகம் வெளியீடு

திருவொற்றியூர்: டபிள்யூ பி. ஏ.சவுந்தரபாண்டியன் நாடாரின் 130 பிறந்த நாள் விழாவை சென்னையில் உள்ள அனைத்து  நாடார் உறவின்முறை சங்கங்களும் ஒன்றிணைந்து நாடார் மகாஜன சங்கம் மூலம்  சென்னை கொடுங்கையூரை அருகில் உள்ள சேலைவாயலில் உள்ள திருத்தங்கல் நாடார் கல்லூரியில், நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ் தலைமையில் நடத்தியது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட சங்கங்கள்  கலந்துகொண்ட விழாவில் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்ட சௌந்தரபாண்டியனார்  உருவப்படத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மகளிர் மன்ற பொறுப்பாளர்கள் காந்தி பிரபாகரன், தமிழ்மணி சுப்பையா, ராஜேஸ்வரி மனோகரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பட்டிமன்ற நடுவர்  அவணி மாடசாமி வரவேற்றார்.

இதில், நீதியரசர் ஜோதிமணி பேசும்போது, ‘’நாடார் சமுதாயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சௌந்தர பாண்டியன்’ என்றார். பின்னர் 50 ஆண்டு காலமாக சமுதாயப் பணியாற்றி வந்த நாடார் மகாஜன சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு பாண்டியனார் விருதுகள் வழங்கினார். எழுத்தாளர் சிதம்பர ராஜேந்திரன் எழுதிய  டபிள்யூ. பி. ஏ. சௌந்தரபாண்டியனார் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை தமிழக தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். சென்னையில்  சேவை மனபான்மையுடன் பள்ளிகளை நடத்தி சிறப்பாக செயலாற்றி வரும்  திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை தரும பண்டு, மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை மகமை தரும பண்டு, அயன்புரம் நாடார் உறவின்முறை, சங்கங்கள், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, பகுதியில் உள்ள  உறவின்முறை சங்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் சங்கங்களுக்கும் அமைச்சர்  பாண்டியனார் விருது வழங்கினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன், எம்எல்ஏக்கள் பிரபாகர்ராஜா, ஏ.ஜே. எபினேசர், தமிழக பாஜ  துணைத் தலைவர் கரு.நாகராஜன், பத்திர பதிவுத்துறை முன்னாள் தலைவர் ஆறுமுக நாயனார், நெல்லை, தூத்துக்குடி நாடார் பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி இயக்குனர் கே.நாகராஜன், விஜயதுரை  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், சிவகாசி எம்எல்ஏ அசோகன், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனர் ராகம் சௌந்தர பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா, நாடார் மஹாஜன சங்கம் எஸ்.ஜே.மகா கிட்சன் கரு.மு.சி.சின்னத்துரை நாடார், திருவொற்றியூர் நாடார் உறவின்முறை சங்க தலைவர் எம். காமாட்சி, டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.பி. மனோகரன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் ஜெகதீஷ், சௌந்தர், முருகன் கலந்துகொண்டு பேசினர்.

சௌந்தரபாண்டியனார்  பிறந்தநாள் விழாவை மாநாடு போல் நடத்தி காட்டிய கரிக்கோல்ராஜுக்கு மணலி, சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை மகமை தரும பண்டு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அயன்புரம்  நாடார் உறவின் முறை சங்கம், சென்னை வாழ் திருத்தங்கள் இந்து நாடார் உறவின்முறை தரும பண்டு, வட சென்னை வாழும் திருச்செந்தூர், வைகுண்டம், சாத்தான்குளம் தாலுகா நாடார் ஐக்கிய சங்கம், இந்து நாடார் அபிவிருந்தி தர்ம பண்டு, மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை மகமை தரும பண்டு, சென்னையில் இருக்கும் கீழ ஈரால் கருப்ப நாடார் வகையறா தர்ம அபிவிருத்தி பண்டு, சென்னையில் வாழ் புது சூரங்குடி இந்து நாடார் உறவின்முறை, கீழ ஈரால்  காமாட்சி அம்மன் சிட் பண்டு லிமிடெட், சென்னை வாழ் வளையப் பூக்குளம் சத்ரிய இந்து நாடார் உறவின்முறை, திருவொற்றியூர் நாடார் உறவின்முறை ஆகிய சங்கங்கள் விழாவினை நடத்தியது.

விழாவில் நிர்வாகிகள் ஏ.வி.எஸ் மாரிமுத்து, விஏ.பிரபாகரன், டி.பாண்டியராஜன், ஏ.டி.சுப்பையா, கே. சந்திரமோகன், ஆர். பி. மனோகரன், ஓ. என்.பி. நல்லதம்பி, வி. ஆனத்தராஜ், ஏ.முருகேசன், வி.கருணாகரன், எஸ்.பெரியாண்டவர், கரு. சீ.ராமச்சந்திரன், எஸ்.பெரியாண்டவர், எஸ். கனகராஜ், எஸ்.வீரபாண்டியன், ஆர். பொன்ராஜ், ஜி.சிவசுப்பிரமணி, எஸ். ஜெயச்சந்திர பாக்கியராஜ், எம்.முத்துமாரியம்மன் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவின்முறை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கரிக்கோல்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories: