காணிப்பாக்கத்தில் 18ம் நாள் பிரமோற்சவம் கல்பவிருட்ச வாகனத்தில் விநாயகர் அருள்பாலிப்பு-திரளான பக்தர்கள் தரிசனம்

சித்தூர் : காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவத்தின் 17ம் நாளான நேற்று கல்பவிருட்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

   சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி, கடந்த 1ம் ேததி 21 நாட்கள் கொண்ட வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 17ம் நாளான நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை புஷ்ப பல்லக்கு சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. காவல்துறையினர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரமோற்சவத்தின் 18ம் நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மாலை கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் நான்கு மாட வீதியில் வலம் வந்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து சுவாமி  தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

அதேபோல் காவல்துறையினர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 19ம் நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. அதனை அடுத்து பூளங்கி சேவை வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

Related Stories: