ஐதராபாத்: புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. புஷ்பா முதல் பாகத்தில் பஹத் பாசில் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு பாலிவுட் நடிகர் பாபி தியோலிடம் பேச்சு நடந்தது. அவர் வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்துதான் பஹத் பாசில் இதில் நடித்தார். இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என தகவல் வெளியானது. பழங்குடி இனத்தை சேர்ந்தவராக விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்பட்டது. இது பற்றி விசாரித்தபோது, அவரிடம் இயக்குனர் தரப்பில் பேசியிருக்கிறார்கள்.