சென்னை: நீட் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும், தகுதி மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் கடந்த ஆண்டு குறைந்த பட்சமாப 138 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு தகுதி மதிப்பெண் 117ஆக குறைந்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு, கடந்த ஆண்டு தகுதி மதிப்பெண் 108; இந்த ஆண்டு 93 ஆக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் 138 முதல் 720 வரை தகுதி மதிப்பெண் எடுத்தவர்கள் 7 லட்சத்து 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு 8 லட்சத்து 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வை 17 லட்சத்து 64 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதில் 9 லட்சத்த 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் தேர்ச்சி இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு பெரிய அளவில் போட்டி இருக்கும்.
தமிழகத்தில் 1,32,167 பேர் தேர்வு எழுதிய நிலையில், 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 51.28% சதவீதமாகும். கடந்த ஆண்டு 58 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 18 ஆயிரம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் தகுதி மதிப்பெண் இந்த ஆண்டு 12 சதவீதம் தான் இருக்கிறது. இது நிர்வாக ஒதுக்கீட்டில்தான் சேர முடியும். இந்த நீட் தேர்வால் வியாபாரம் தான் ஆகும். இந்த தேர்வு சரியான அணுகுமுறை இல்லை. டாப்பர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 700க்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் 197பேர் இருந்தனர். இந்த ஆண்டு அதிகபட்சமாக 100 பேர் தான். 695 மதிப்பெண் எடுத்தவர்கள் கடந்த ஆண்டு 270 இருந்தனர். இந்த ஆண்டு 150 பேர் தான். 690 மதிப்பெண் கடந்த ஆண்டு எடுத்தவர்கள் 509 பேர் இருந்தனர். இந்த ஆண்டு 380 பேர் தான் எடுத்துள்ளனர். 685 கடந்த ஆண்டு 804 பேர் இருந்தனர். இந்த ஆண்டு 540 பேர் தான் உள்ளனர். கடந்த ஆண்டு 680 எடுத்தவர்கள் 900 பேர், இந்த ஆண்டு 720 பேர் உள்ளனர். இதை எல்லாம் பார்க்கும் போது கட்ஆப் மதிப்பெண்கள் தமிழகத்தில் எப்படி இருக்கும் அகில இந்திய அளவில் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் பெரிய மாற்றங்கள் இருக்கப் போவதில்லை. காரணம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது நாடு முழுவதும் உள்ள 611 மருத்துவக் கல்லூரிகளில் 91,927 இடங்கள் உள்ளன. பல் மருத்துவப் படிப்பில் 317 கல்லூரிகளில் 27,698 இடங்கள் உள்ளன. அதனால் தமிழகத்தில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலான மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க முடியாத நிலை இருப்பதால் அவர்கள் தேர்ச்சி பெறுவதும் குறைந்துள்ளது. அதனால் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வால் பயன் இல்லை என்றார். பயிற்சி மையங்களில் படிக்காததால் நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு பயன் இல்லை.