வடசென்னையில் கஞ்சா விற்ற பெண் தாதா உட்பட 2 பேருக்கு குண்டாஸ்

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கைலாசம் தெருவை சேர்ந்தவர் தாரணி (24). அப்பகுதியில் தாதாவாக வலம் வந்த இவர் கொடுங்கையூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து, ஆட்களை வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பலமுறை கஞ்சா விற்ற வழக்கில் இவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் இவரது வீட்டில் சோதனை செய்தபோது, 14 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது. அவற்றை கைப்பற்றி, தாரணியை கைது செய்தனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜீவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

 இதை ஏற்று தாரணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார். நெற்குன்றம் செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் கக்கில் (எ) மதன் (22). இவர்மீது கொடுங்கையூர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரும், தாரணியுடன் சேர்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட தாரணியின் சகோதரி வினோதினி மற்றும் ஆல்பர்ட் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: