முதல்வரின் திராவிட மாடல் சாதனைகளை பறைசாற்றி செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாட முடிவு: திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

சென்னை: முதல்வரின் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைப் பறைசாற்றி செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.அறிவித்துள்ளார்.

திமுகவின் தகவல் ெதாழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அன்பகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கூட்டத்தில் செப்டம்பர் மாதம்  திராவிட மாதமாக கொண்டாடுப்படும். பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், திமுகவின் தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா செப்டம்பர் மாதத்தில் இடம் பெறுவதால், அதனை திராவிட மாதமாக முன்னெடுத்து, இன்றைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கத்தின் கொள்ைககளையும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், திராவிட இயக்க  தலைவர்களின் தியாக உணர்வு மிக்க போராட்டங்களையும் கொண்டு சேர்ப்பது என்பதே இதன் நோக்கமாகும். நாள்தோறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைத்­தளப் பக்கங்களில் திராவிடம் குறித்த சிறுபதிவுகள், காணொலிகள், விரிவான கட்டுரைகள் ஆகியவை வெளியிடப்படும்.

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு டிவிட்டர் ஸ்பேஸில் திமுகவின் முன்னோடிகள் திராவிட இயக்க சாதனைகளையும் கொள்கைகளையும் பற்றி உரையாற்றுவார்கள். திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் இதற்கான நேரம் கோரப்பட்டிருக்கிறது. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.உரையாற்றுகிறார். அமைச்சர்கள், திமுகவின் மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், சொற்பொழிவாளர்கள், சமூகப் பொருளாதார வல்லுநர்கள் ஆகியோரும் உரையாற்ற இருக்கிறார்கள். நேர வசதிக்கேற்ப கேள்வி- பதில் பகுதியும் உண்டு. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், இயக்ககத்தின் வரலற்று அடையாளங்களை நேரில் அறியும் வகையில் திராவிட தடம்  எனும் பயணம் சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் மேற்கொள்­ளப்பட இருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களுக்காக  நிகழ்ச்சிகள், கலைத்திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்படும். 

Related Stories: