கீழடி அருகே அகரத்தில் 9 அடுக்கு சுடுமண் உறைகிணறு

திருப்புவனம்: கீழடி அருகே அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி மட்டுமின்றி, அதன் அருகே அகரம், கொந்தகையிலும் அகழாய்வு நடந்து வருகிறது.

அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே கொண்ட சுடுமண் உறைகிணறு வெளிப்பட்டிருந்தது. இங்கு தொடர்ந்து நடந்து வந்த அகழாய்வில் முதன்முறையாக தற்போது 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வருவதால் உறைகிணற்றின் உயரம் இன்னமும் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. கீழடி அகழாய்வில் கடந்த 6ம் கட்ட அகழாய்வில் தமிழகத்திலேயே மிகப்பெரிய 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: