உச்ச நீதிமன்றம் உத்தரவு குஜராத் கலவர வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரியும், இழப்பீடு கோரியும் 10 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதால் அவற்றை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.

இதே போல, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான நிலுவை வழக்குகளும் காலாவதியாகி விட்டதால் அவற்றையும் முடித்து வைப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Related Stories: