திமுக தலைவராக பொறுப்பேற்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

சென்னை: திமுக தலைவராக பொறுப்பேற்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பொறுப்பேற்றார். திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், சென்னை கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து  பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர் ஆ.ராசா, தலைமை கழக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன்,  அன்பகம் கலை, பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்டோர் வாழ்த்து  தெரிவித்தனர். திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: