கோஹ்லி பார்முக்கு திரும்புவார்; கங்குலி நம்பிக்கை

பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்துள்ள பேட்டி: கோஹ்லி இந்தியாவுக்கு மட்டுமல்ல, அவருக்காகவும் ரன் அடிக்கவேண்டும். இது அவருக்கு ஒரு நல்ல சீசனாக இருக்கும். அவர் தனது பழைய நிலைக்கு திரும்பி வருவார் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம். அவரின் 71வது சதத்திற்கு அனைவரும் காத்திருக்கும் நிலையில், நான் உறுதியாக நம்புகிறேன், அவரும் அதற்காக உழைக்கிறார்.

அவர் ஒரு பெரிய வீரர், நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருக்கிறார். ரன் அடிக்க அவருக்கு சொந்த ஃபார்முலா உள்ளது. அவர் நிச்சயமாக ரன்களை எடுப்பார் என்பது எனக்குத் தெரியும். அவர் சிறந்த வீரராக இல்லாவிட்டால், குறுகிய காலத்தில் இவ்வளவு ரன்கள் எடுத்திருக்கமாட்டார், என்றார்.

Related Stories: