ராணிப்பேட்டை கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப்பில் மோசடி முயற்சி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனின் போட்டோவுடன் கூடிய ‘வாட்ஸ் அப்’ எண்ணில் இருந்து, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 30 ஆன்லைன் கிப்ட் வவுச்சர்களை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள் உட்பட பலருக்கும் நேற்று தகவல் பகிரப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தெரிவித்தனர். அவர் அந்த எண்ணிற்கு எவ்வித பதில் தகவலும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் கலெக்டரின் வாட்ஸ்அப்பில் உள்ள டிபி போட்டோவை பயன்படுத்தி, பணம் பறிக்க முயற்சித்துள்ளது தெரியவந்தது.

Related Stories: