அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவின் பேரில், போதை பொருட்கள்  நடமாட்டம் தடுப்பு  பணிகள் தீவிரமடைந்து வருகிறது.   இதில் ஒரு பகுதியாக ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் திருத்தணி டி.எஸ்.பி  விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார்,  விழிப்புணர்வு கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்  ஜெயந்தி சண்முகம் வரவேற்றார். இதில் ஊராட்சி  மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

டி.எஸ்.பி பேசுகையில், `ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள   தமிழக எல்லை கிராமங்கள் வழியாக  கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை  பொருட்கள், கடத்தல் சம்பவங்கள் தடுத்து நிறுத்த, உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீசாருக்கு உதவ வேண்டும்’என   வலியுறுத்தி பேசினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  அற்புதராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகலிங்கம், ரவிக்குமார், மலர்விழி, லதாராமசாமி,தேவிமணிமாறன், விஜயன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: