கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சற்று குறைந்தது: தக்காளி, சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரத்துடன் ஓப்பிடுகையில் பல்வேறு காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்டஅண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

வரத்து குறைவால் கடந்த வாரம் தக்காளி, வெங்காயம், பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்தது. தக்காளி விலை சில்லறை விற்பனையில் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விலை போனது. இந்நிலையில் வரத்து அதிகரித்திருப்பதால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. தக்காளி கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.72 வரை போனது. இன்று அதன் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது.

இதே போல வெங்காயம், கேரட், பீட்ரூட், கோஸ், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் ரூ.50க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.180வரை விற்கப்பட்ட பீன்ஸ் விலை தற்போது கிலோ ரூ.90 ஆக குறைந்துள்ளது. இதே போல கிலோ ரூ.120க்கு விலை போன அவரைக்காயும் ரூ.90 ஆக குறைந்துள்ளது. முருங்கைக்காய், குடைமிளகாய் ஆகியவற்றை விலையும் கிலோ ரூ.100க்கும் கீழ் குறைந்துள்ளது. சுப நிகழ்ச்சிகள் குறைவாக இருப்பதால் காய்கறிகளின் தேவையம் குறைந்துள்ளது. இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் வரும் வாரங்களில் அதன் விலை மேலும்குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சற்று குறைந்தது: தக்காளி, சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: