ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 7-வது நாள் அமர்வு தொடங்கியது. வினா, விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 அறிவிப்புகள் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்

தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது: முதலமைச்சர்

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில் நிறுவனங்கள் வருவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மோட்டார் வாகனங்கள், மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயார்

ஒசூருக்கு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. ஒசூர் பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள்.

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்.

கோவையில் நூலகம் கட்டுமான பணி விரைவில் தொடங்கும்

கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க பணிகள் தொடங்கப்படும்.

திருச்சியில் கலைஞர் பெயரில் புதிய நூலகம்

மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும் ஏன் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: