அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

பள்ளிப்பட்டு: அத்திமாஞ்சேரிப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சந்திரன் எம்எல்ஏ  இலவச சைக்கிள்களை வழங்கினார்.

திருத்தணி அடுத்த பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்,  திருத்தணி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு தலைமை வகித்தார். பள்ளி  தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்  பங்கேற்று  38 பிளஸ்டு மாணவ, மாணவியருக்கு  தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கினார். அப்போது, எம்எல்ஏ சந்திரன் பேசுகையில், `கல்விக்காக தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்ப்படுத்தி வருகிறது.

பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பி தனியார் பள்ளிகளுக்கு  இணையாக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. திருத்தணி தொகுதியில், கிராம பகுதிகளில் அரசு பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால், மாணவர்களுக்கு  வசதிகள் ஏற்ப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு 10 பள்ளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில்   மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் மேஜை, நாற்காலிகள் வழங்கப்படும்’என பேசினார். இந்நிகழ்ச்சியில் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நற்குணன், கமலநாதன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் பொன்னுதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: