பெருமாட்டி ஊராட்சியில் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்

பாலக்காடு :  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா பெருமாட்டி ஊராட்சி பிளாச்சிமடாவில் அமைந்துள்ள தனியார் குளிர்பான நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிறப்பு சிகிச்சை முகாமை கேரள முதல்வர் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கேரள மின்வாரித்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன்குட்டி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பேசியதாவது: பெருமாட்டி ஊராட்சியில் பிளாச்சிமடா என்ற இடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பூட்டிகிடந்த குளிர்பான நிறுவன கட்டடத்தில் பாலக்காடு மாவட்ட நிர்வாகம்  550 படுக்கைகள் வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம் அமைத்துள்ளது. இவற்றில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் கொண்ட 100 படுக்கைகளும், வெண்டிலேட்டர் வசதியுடன் 20 படுக்கைகளும், ஐ.சி.யூ., வசதியுடைய 50 படுக்கைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளது. கே.எல்., ஆக்சிஜன் டேங்க், தள்ளுவசதிக் கொண்ட எக்ஸ்ரே மிஷின், 24 மணிநேரம் செயல்படுகின்ற கொரோனா சிகிச்சை மையம், மருந்தகம் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1.10 கோடி செலவீட்டில் சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் தொடர்ந்த நிலையில் உள்ளது. மூன்றாவது அலைவரிசை தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார். எம்.எல்.ஏ., பாபு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள்,  சித்தூர் பிளாக் பஞ்சாயத்துத் தலைவர் முருகதாஸ், ஊராட்சித் தலைவர்களான  பிரேம்குமார், சதீஷ், ஜோஷி பிரிட்டோ, ப்ரியதர்ஷினி, அனீஷ், பாலகங்காதரன்,  சிவதாஸ், மாவட்ட கலெக்டர் மிருண்மயி ஜோஷி, டி.எம்.ஓ., டாக்டர். ரீத்தா  ஆகியோர் உட்பட அனைத்துத்தரப்பு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்….

The post பெருமாட்டி ஊராட்சியில் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: