ஆசிய கோப்பை தகுதி சுற்று 8 ரன் வித்தியாசத்தில் சிங்கப்பூரை வீழ்த்தியது ஹாங்காங்

அமெரட்: ஆசிய கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில், ஹாங்காங் அணி 8 ரன் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணியை போராடி வென்றது. ஒமான், அல் அமரெட் கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சிங்கப்பூர் முதலில் பந்துவீசியது. ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. கின்சிட் ஷா அதிகபட்சமாக 34 ரன் விளாசினார். ஹரூன் அர்ஷத் 27*, யாசிம் முர்டசா 26, ஜீஷன் அலி 20 ரன் எடுத்தனர். ஹாங்காங் அணிக்கு உதிரியாக மட்டுமே 15 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் பந்துவீச்சில் அம்ஜத், பிரகாஷ், அக்‌ஷய் தலா 2, சுனில், வினோத் பாஸ்கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சிங்கப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன் மட்டுமே எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜனக் பிரகாஷ் 31, அரித்ரா தத்தா 29, அவி திக்சித் 19, ரெஸா கஸ்னவி 17, மன்பிரீத், சுரேந்திரன் தலா 12 ரன் எடுத்தனர். ஹாங்காங் தரப்பில் எசான் கான் 3, கஸன்பார் 2, கின்சிட் ஷா 1 விக்கெட் கைப்பற்றினர். ஹாங்காங் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. தகுதிச் சுற்றில் யுஏஇ, குவைத் அணிகளும் போட்டியிடுகின்றன.

Related Stories: