திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதால் கள்ளக்காதலியை துண்டுதுண்டாக ெவட்டி பதுக்கிய நிருபர் கைது: மகாராஷ்டிராவில் பயங்கரம்

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற பத்திரிகையாளர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம்  ஷியூரைச் சேர்ந்த பகுதிநேர நிருபர் சவுரப் லகே (35). இவருக்கும் திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ள பெண்ணுக்கும் (24) இடையே கள்ளக்காதல் இருந்தது. தனது கணவரிடம் இருந்து பிரிந்த அந்தப் பெண், ஹட்கோ பகுதி வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது கள்ளக்காதலியை பார்க்க சவுரப் லகே அடிக்கடி வந்து சென்றார். இருவரும் நெருக்கமாக பல மாதங்கள் இருந்த நிலையில், அந்தப் பெண் சவுரப் லகேவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த சவுரப் லகே, அடிக்கடி வந்து செல்வதை மட்டும் விடவில்லை.

இந்த நிலையில் சம்பவ நாளன்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கட்டாயப்படுத்தியதால், சவுரப் லகே ஆவேசமடைந்தார். திடீரென தனது கள்ளக் காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். அதன்பின் கள்ளக்காதலியின் கை, கால், தலை என உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து மூட்டைக் கட்டி ஷியூரில் உள்ள குடோனில் மறைத்து வைத்தார். மீதமுள்ள உடல் உறுப்புகளை எடுத்துச் செல்லும் போது, சவுரப் லகேவை வீட்டின் உரிமையாளர் பின்தொடர்ந்து சென்றார். அவரது நடவடிக்கை சந்தேகத்ைத எழுப்பியதால், போலீசுக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்தார். போலீசார் சவுரப் லகேவை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர், துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட நிருபர் சவுரப் லகேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: