பஞ்சாப்பில் ரூ.150 கோடி சுருட்டல்

சண்டிகர்: பஞ்சாப்பில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது விவசாயிகளுக்கு பயிர் கழிவுகளை அகற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 11 ஆயிரம் இயந்திரங்கள் மாயமாகி உள்ளது. இந்நிலையில், தற்போதைய வேளாண் அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் நேற்று கூறுகையில், ‘கடந்த 2018-19ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரையில், விவசாயிகளுக்கு  மொத்தம் 90,422 இயந்திரங்கள் மானியத்தில்  வழங்கப்பட்டன. இதில் ரூ.150 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த விசாரணையில் 11,275 இயந்திரங்கள் பயனாளிகளிடம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க  லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’என்றார்.

Related Stories: