செல்போன் பறிப்பை தடுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

அம்பத்தூர்: வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (36). பெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது, அவரை வழிமறித்த 2 பேர், அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.

பாலாஜி அவர்களை தடுத்து, கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், பாலாஜியை மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: