ஊத்துக்கோட்டையில் போதை தடுப்பு ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்  கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது . இதனால் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை பகுதி  வியாபாரிகளிடம்  போலிசார்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வியாபாரிகளிடம் போதை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என கையொப்பம் இட்டு எழுதிகொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் பென்னலூர் பேட்டை காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட வணிகர்கள், அரசால் தடை செய்யப்பட்ட  போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  இதில் டிஎஸ்பி சாரதி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை, பென்னலூர்பேட்டை சப் - இன்ஸ்பெக்டர் சீனிவாசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கூட்டத்தில் டிஎஸ்பி பேசியதாவது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,  ஆன்ட்ஸ் , கஞ்சா  உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யக்கூடாது, மேலும் ஊத்துக்கோட்டை ஆந்திர எல்லையில் உள்ளதால் பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்கிறார்களே நாமும் விற்பனை செய்வோம் என வியாபாரிகள்  விற்பனை செய்யக்கூடாது அப்படி அதையும் மீறி விற்பனை செய்தால் கட்டாயம் சிறை தண்டனை உண்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என பேசினார்.

பின்னர் வியாபாரிகள் போதை பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் நடராஜன்,  செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில்  சிறப்பு எஸ்.ஐ. பிரபாகரன் நன்றி கூறினார்.

Related Stories: