குஜராத்தில் ரூ.1125 கோடி போதைப்பொருள் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் வதோதரா நகருக்கு அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை மற்றும் கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாயன்று தீவிரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 225 கிலோ எடையுள்ள மெப்ட்ரோன் எனப்படும்  போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் மதிப்பு ரூ.1125 கோடியாகும்.

முதற்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மெப்ட்ரோன் எனப்படும் போதைப்பொருளானது பரூச் மாவட்டத்தில் சேக்யா கிராமத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தொழிற்சாலை உரிமையாளர்கள் உட்பட ஆறு பேர் போலீசார் நேற்று கைது  செய்தனர்.

Related Stories: