லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் கனரக வாக னங்களில் சரக்கு ஏற்றிவரப்படுகிறது. குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்குள் இரவாகிவிடுவதால் சாலை யோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். பகலானதும் மீண்டும் வாகனங்களை எடுத்துக்கொண்டு செல்வார்கள். அந்தவகையில் நேற்று முன்தினம் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு டோல்கேட் பகுதி சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுத்துள்ளனர்.

அப்போது அங்கு  மதுபோதையில் வந்த 3 பேர், லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து வடமாநில லாரி டிரைவர், அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தபோது, மாதனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), அமர்நாத் (20), சுதர்சன் (19)  ஆகியோர் லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன், நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமை யிலான போலீசார்  குற்றவாளிகள் 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து கத்தி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் அம்பத்தூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: