மனைவி, மாமியார் கொடுமையால் பெங்காலி நடிகர் தற்கொலை முயற்சி: உடலில் ரத்த காயங்களுடன் அட்மிட்

கொல்கத்தா: மனைவி, மாமியார் கொடுமையால் பெங்காலி நடிகர் சைபல் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரின் கஸ்பா பகுதியில் பெங்காலி நடிகர் சைபல் பட்டாச்சார்யா, குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொள்ளும் ெபாருட்டு தன்னைத்தானே உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு  சித்தரஞ்சன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்த போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் சைபல் பட்டாச்சார்யா வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அந்த வீடியோவில் அவர் தனது மனைவி மற்றும் மாமியார் மீது பல்வேறு குற்றங்களை கூறினார். அதன்பின் அந்த வீடியோ அவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. அவர் தனது வீட்டில் குடிபோதையில் கத்தியால் தனது உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டார்.

தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்றனர். ஏற்கனவே பெங்காலி நடிகர்களான பல்லவி டே, பிதிஷா டி மஜும்தார், மஞ்சுஷா நியோகி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது சைபல் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்காலி சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: