கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் வரும் அரசு பேருந்து: பயணிகள் குழப்பம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருராட்சி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டுமே அரசு, மற்றும் தனியார் பேருந்து வருகையால் பொதுமக்கள் எங்கே பஸ் ஏரி பயணிப்பது என்று பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளும் ஒரு பேருராட்சி உள்ளன. இதில் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.  இங்குள்ள அனைத்து மக்களும் தங்களுடைய தேவைகளுக்காக கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு காய்கறி  கடை,  மளிகை பொருட்கள், பர்னிச்சர், செல்போன் பழுது பார்த்தல், நூலகம், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கும் மற்றும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோயம்பேடு, பொன்னேரி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த  இரண்டு வருடங்களாகவே கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று கால்வாய் அமைத்தல், மின் கம்பம் அகற்றுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுமார் 100 சதவீதம்  பணிகள் முடிவடைந்தது. ஆனால் சில அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி அருகே உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு வருடமாக சென்றது.  இதனால் பயணிகளும் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த உடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் இடம் பொதுமக்கள்  மற்றும் வியாபாரிகள் அனைத்து அரசு பேருந்துகளை கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  

அந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்லும் அரசு பேருந்துகள் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதி வழியாக செல்ல வேண்டுமென போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.  அதைத்தொடர்ந்து 200 திருப்பதி, 112 தீ,114   ஆகிய பேருந்துகள் கும்மிடிப்பூண்டி பஜாருக்குள் வந்து சென்றது.  இதனால் வியாபாரிகளும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   ஆனால் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதியில் மீண்டும் சாலையோர கடைகள் நெருக்கமானதால் மேற்கண்ட பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டுமே வந்து செல்கின்றது.  இதனால் மக்கள் மீண்டும் குழப்பத்தில் உள்ளனர். உடனடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதியில் கடைகளை அகற்றி தொடர்ந்து அரசு பேருந்துகள் வரும் வகையில்  உத்தரவு இடவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

Related Stories: