10 கிலோ குட்கா பொருள் விற்ற இருவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பதாக கவரப்பேட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் அதிரடியாக கவரப்பேட்டை பஜார், தெலுங்கு காலனி, சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர்.

சோதனையின் போது கவரப்பேட்டை ஜி. என். டி சாலையில் பெட்டிக்கடை ஒன்றில் 10 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாபு(30), அகஸ்டின்  (44) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: