மின்சார திருத்த மசோதா நிறைவேற்றுவதை கண்டித்து திருவள்ளூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:  மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து   தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காக்களூரில் உள்ள திருவள்ளுர் துணை மின்நிலையம் அருகே மின்சாரத் தொழிலாளர் சம்மேளன தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர்.மதுசூதன்பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட தலைவர் சிட்டா  வாசுதேவன். மணி. ஒ.டி.எஸ்.மணி. மற்றும் ஏராளமான மின்வாரிய தொழிலாளர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

திருத்தணி: திருத்தணியில் மின்சார திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மின்சார திருத்த மசோதா சட்டம் 2022 ரத்து செய்யக்கோரி  மின்சார சட்ட நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பாக திருத்தணியில் கமலா திரையரங்கம் அருகில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.   இந்த சட்டத்தினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நூறு யூனிட் இலவச மின்சாரம் விசைத்தறி தொழிலுக்கு வழங்கப்படும். இலவச மின்சாரம் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்  அனைத்தும் பறிபோய்விடும்.

அதுமட்டுமல்ல மின்சார துறை தனியார் மையமாகப்படும் எனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டம் மசோதா 2022 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அந்தோணி ,விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் அப்சல் அகமத் வட்டக்குழு உறுப்பினர் கரிமுல்லா,   நகர கிளை செயலாளர்கள் ஜெயவேல், ரகுபதி மற்றும் கிளை செயலாளர்கள் கண்ணப்பன், பிருந்தாவனம்,  கரும்பு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாத் ,திருத்தணி கோட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: